வேலணை துறையூர் கடற்கரையில் இறந்து கரையதுங்கிய டொல்பின்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நேற்று June – 20 (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article