வேலணையில் பலத்த மழை, காற்றினால் ஆலயத்தின் கூரை முற்றாக சேதம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (மே 18) மழையுடன் வீசிய காற்று காரணமாக வேலணை பகுதியில் ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக சேதமாகியுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயமொன்றின் கூரையே மழை மற்றும் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளதுடன் இதனால் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article