வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி இலட்ச ரூபாய் மோசடி செய்தவர் சிறையில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம்80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 80 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு, இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைக்காதநிலையில் , இளைஞன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடுசெய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பணத்தினை பெற்றுக்கொண்டவரை கைது செய்து, விசாரணைகளின் பின்னர்நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதமன்றில் முற்படுத்திய போது , சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

Share this Article