வெடியரசன் கோட்டை வரலாற்றை திரிபுபடுத்தும் முயற்சிக்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்துகின்ற விதமாக இலங்கை அரச தொல்பொருள் திணைக்களத்தால் வெடியரசன் கோட்டை பௌத்தத்திற்கு சொந்தமான ஒரு இடம் என்பது போன்ற ஒரு அறிவித்தல் பலகை அங்கே நாட்டப்பட்டிருக்கின்றது.

அந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம் (மார்ச் 29) நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

Share this Article