வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் தீர்மானம் – சத்தியலிங்கம் MP!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா வடக்கு பிரதேச சபை நிர்வாகத்தை முரண்பாடுகளின்றி கொண்டுசெல்வது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றஉறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச சபையை நிர்வகிக்கும் கட்சிகளின் உடையபிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடிய இருந்தோம்.

கடந்த 4 மாதமாக சபையை நடத்தும் போது எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகள்மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டது.

இதில் பல விடயங்கள் கட்சிகளினால் உம் உறுப்பினர்களினாலும்முன்வைக்கப்பட்டது. அதனை ஆராய்ந்து இப் பிரதேச சபையை மக்களுக்குபயனுள்ள வகையில் எவ்வாறு கொண்டு செல்லலாம் எனகலந்துரையாடினோம்.

குறிப்பாக வடக்கில் வவுனியா வடக்கு பிரதேச சபை என்பது எமது மக்களின்இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடுகளை கொண்ட பிரதேசங்களைகொண்டது.

நாங்கள் தமிழ் மக்களுடைய நன்மை கருதி இதனை சிறப்பாக கொண்டுநடத்துவது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தவிசாளருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்களே வெளி நடப்பு செய்தமைதொடர்பிலும் பேசப்பட்டது.

சுமுகமான நிலை தான் தொடர்ந்து இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் வருவதுஇயற்கை. அவ்வாறு எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நிர்வாகத்தைஎவ்வாறு கொண்டு நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்

Share this Article