வவுனியா சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றுத் தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17 ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டமையுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Share this Article