வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நயினாதீவில் சமய பாடப் பரீட்சை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினை தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நயினாதீவு மணிபல்லவ சனசமூக நிலையத்தினரும் வீரபத்திரர் ஆலய கூட்டுப்பிரார்த்தனை சபையினரும் இணைந்து வருடாவருடம் நடாத்தும் 23ஆவது சமய அறிவுப்பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (18.பெப்ரவரி)  நயினாதீவு மகாவித்தியாலய பரீட்சை மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் இடம்பெறவுள்ளது.

தரம் 01,02,03,04,05 காலை 8.30 மணிக்கும்  தரம் 06,07,08,09,10,11,12. காலை 10.00 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article