யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 6 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
இன்று (பெப்ரவரி 28) சபையில் வரவு – செலவுத் திட்டம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டால் இரண்டாவது தடவையாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சமர்ப்பித்த இரு வரவு – செலவுத் திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.