யாழில் நவீன முறையில் உருளைக்கிழங்கு அறுவடை விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நவீன முறையில் செய்யை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றது.

சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி பொலித்தீன் மூடுபடையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கை செய்யப்பட்டது.

நவீன முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடையை மாவட்டச் செயலாளர் வைபவ ரீதியாக ஆரம்பித்தார்.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாதசுந்தரன், மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி, பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி கோப்பாய் பிரதேச செயலாளர் மதியழகன் சுபாஜினி மற்றும் விவசாய பொதுனாசிரியர் விவசாயிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article