வரலாறு படைத்த சாதனையாளர்களுக்கு மன்னாரில் மதிப்பளிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட மாகாண ரீதியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு கொண்ட16 ஆவது வட மாகாண தடகள விளையாட்டு போட்டி 2025 இல் மன்னார் கல்விவலயத்தின் முத்தரிப்பு துறை பாடசாலை பங்கு கொண்டு நலைநாட்டிய சாதனையாள்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (செப்.24) இடம்பெற்றுள்ளது.

இப்போட்டிகளில் பெண்கள் பிரிவில் 92 புள்ளிகளை பெற்று வட மாகாணரீதியில் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

அத்துடன் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பில் இப் பாடசாலை அணியினர் 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் ,ஒரு வெண்கல பதக்கம்என்பனவற்றையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

அதேபோன்று ஆண்கள் பிரிவிலும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தது .இந்தசாதனைகளை நிகழ்த்திய வெற்றியாளர்களை  முத்தரிப்பு துறை பாடசாலைசமூகத்தினர், மற்றும் பழைய மாணவர்கள் ,பெற்றோர் ,கிராம மக்கள் என அனைவரும் இணைந்து மதிப்பளிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாகவும்இடம்பெற்றுள்ளது.

Share this Article