யாழ் முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முச்சகரவண்டிகள் நடாத்துனர் சங்கத்தினர், வாடகைக்கார் நடாத்துனர் சங்கத்தினர் மற்றும் தனியார் பேரூந்து நடாத்துனர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் திருமதி.வி.மதிவதனி அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் அண்மையில் மாநகரசபை திட்டமிடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துதல், முச்சக்கர வண்டிகளின் மாநகர கட்டண அறவீடுகள், வாடகைக்கார்கள் செலுத்தும் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் பேரூந்து வாகனத் தரிப்பிடக்கட்டண நிலுவைகளை அறவீடு செய்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது சங்கங்களின் உறுப்பினர்கள் வாகனங்களை செலுத்தும் நடாத்துனர்களின் தேவைகள், நீண்டகால நிலுவைகள் தொடர்பான பிரச்சினைகள், தங்களது கோரிக்கைகள் என்பவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை துறைசார் அதிகாரிகளுடன் முதல்வர் அவர்கள் கலந்துரையாடி உடனடித் தீர்வுகளை வழங்கியதுடன், சில கோரிக்கைகளை சபையுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்படி கலந்துரையாடலில் ஆணையாளர், பிரதம கணக்காளர், நானாவித இறைவரிப்பகுதி பொதுப்பதிகாரி, பிரதம வருமானவரிப் பரிசோதகர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article
Leave a comment