Tuesday, December 6, 2022

யாழ்.மாவட்டத்தில் 318 வழக்குகள் தண்டப் பணமாக 1,436,500 ரூபா.

Must Read

யாழ். மாவட்டத்தில் கடந்த 6 மாதங்கவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 373 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப்பணிப்பாளருமாகிய அப்துல்லத் தீப்ஜபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வழக்குகள் காலாவதி. விலைப்பட்டியல் இன்மை, உத்தரவாதம் இன்மை , இறக்குமதி விபரமின்மை , குஃகு தரச்சான்றுதல் இன்மை , கட்டுப்பாட்டு விலையினை மீறியமை, பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக பதியப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் அரையாண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஜனவரி மாதம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 வழக்குகளுக்கு 497,000 ரூபா தண்டப்பணமாக கிடைக்கப்பெற்றதாகவும், பெப்ரவரி மாதம் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 357,000 ரூபா கிடைக்கப்பெற்ற தாகவும் அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார். 

மேலும் மார்ச் மாதம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 164,500 ரூபாகிடைக்கப் பெற்றதாகவும், ஏப்ரல் மே மாதங்களில் கொவிட் 19 காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை எனவும், ஜூன் மாதம் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 வழக்குகளிற்கு தண்டப் பணமாக 418,000 கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மொத்தமாக அரையாண்டு காலப்பகுதிக்கு 318 வழக்ககள் பதிவு செய்யப்பட்டு 307 வழக்குகள் திறைவு பெற்று தண்டப் பணமாக 1,436,500கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img