முல்லைத்தீவில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  102  அகதிகளுடன் மியன்மார்நாட்டுப்படகு இன்று (டிசம்பர்19) கரைஒதுங்கியுள்ளது.

குறித்த கப்பலில் உள்ள 102 பேரில்  35 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்இவ்வாறு இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர்சங்கத்தினர்  வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர்  மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிமற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர், கடற்படையினர் பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில்அறியத்தந்துள்ளனர்.

இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்துஅங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article