முல்லைத்தீவில் வாகன விபத்தில் 9 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (மே 21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் முச்சக்கர வண்டியில் பனிஸ் வாங்கச் சென்றபோது, சிறுமி ஒரு சிறிய ரக லொறி மோதி விபத்துக்குள்ளானதாக முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுமி, உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இதற்கு முன் மற்றொரு மரண விபத்தில் தொடர்புடையவர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Share this Article