முல்லைத்தீவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (ஜூலை4) இடம்பெற்றுள்ளது.

ஆலய வீதியில் தேர் வலம் வந்த போது இடையில் இருந்த மின்வடத்தில் தேரின் கலசம் தட்டுப்பட்டு கீழே விழுந்த போது அதில் சிக்குண்டு ஒருவர் இறந்ததுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.

கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்படுவதுடன்  இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article