சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் அமுல்படுத்தப்படவுள்ள நிலைபேறான மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைவுக்கான விரிவுபடுத்தப்பட்ட உதவித்திட்டத்தின் கீழ் 20 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
போரால் விதவையானவர்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
IOM நிறுவனத்தின் நிதியுதவியுடன் OfERR Ceylon நிறுவனத்தினால் இந்த உதவித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான ஆரம்பக் கூட்டம் இன்று (ஜூன் 20) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் IOM,OfERR நிறுவன பிரதி நிதிகளும் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.