யாழுக்கு கொண்டு வரப்பட்ட ஊர்காவற்றுறை – காரைநகர் கடல் பாதைக்கான உதிரிப்பாகங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான கடல் பயணத்தில் பயன்படுத்தப்படும் பாதையை திருத்தியமைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

சில நாட்களுக்கு முன்னரே கொழும்பை வந்தடைந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

திருத்தப்பணிகளுக்கு இரண்டு வாரங்கள் தேவைப்படுமென்பதால் கடல் பாதை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் வரையில், படகுப் போக்குவரத்து சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

Share this Article