நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த வாடி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டமைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் எடிசன் கண்டனம் வெளியிடுள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் கடற்கரையில் வாடி அமைத்து தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது உறவுகளின் 20 இலட்சம் பெறுமதியான வலைகள் நேற்று இரவு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த ஈனச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு இவ்விடயம் தொடர்பாக கௌரவ கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவும் தயாராகவுள்ளேன். இவ்வாறான அருவருக்க தக்க செயல் எமது நெடுந்தீல் நடைபெறாத வண்ணம் நாம் எல்லோரும் இனைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.