மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதுக்குடியிருப்பு தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இருஇளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .

சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டடமேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டுள்ளார்

மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில்பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது அவரும் மின்சாரம்தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும்சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர்மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share this Article