நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தின் தலமைக்காாியலத்தில் தலமைக்காாியலயம் அமைந்துள்ள வீட்டின் உாிமையாளரும், சீக்கிாியாம் பள்ளம் அ.த.க.பாடசாலையில் முன்னாள் அதிபருமான அமரா் ம.செபமாலை அவா்கள் ஞாபகமாக நினைவு நூலகம் கடந்த 20ம் திகதி (பெப்ரவாி 20) நண்பா்கள் வட்டத்தின் ஆலோசகா் மதிப்பிற்குாிய ஆசிாியா் ஏ.எவ்.ஜேக்கப் அவா்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நூல் நிலையத்தில் நண்பாகள் வட்டத்தின் அண்மையில் அமரத்துவம் அடைந்த உறுப்பினா் அமரா் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவா்கள் ஞாபகமாக பாடசாலை மாணவா்களுக்கான பயிற்சி புத்தகங்கள் நண்பா்கள் வட்டத்தின் உறுப்பினா்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
ஜனாதீபன் அவா்களது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரை ஞாபகப்படுத்தி இவ் நினைவு நூலகம் திறந்து வைக்கபப்பட்டது.
இவ் நினைவு நூலகத்தில் தரம் 01 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுக்கான சகல பயிற்சி புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளதுடன் தொடா்ந்து மேலதிக புத்தகங்கள் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 08.00 மணிமுதல் மாலை 06 மணி வரை இவ்வளாகம் திறந்திருப்பதுடன் குறிப்பிட்ட வகுப்புக்களுக்கு மேலதிக வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றது. அனைத்து மாணவா்களம் அலுவலக நேரத்திற்கு சென்று புத்தகங்களை வாசிக்க முடியும்.
இவ் நூல் நிலையத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் மாணவா்கள் கல்வி சாா் புத்தகங்கள், ஆங்கில புத்தகங்கள், மற்றும் அறிவியற்சாா்ந்த புத்தகங்கள் தேவைப்படுவதால் உதவி செய்ய முன்வருவோா் நண்பா்கள் வட்டத்துடன் தொடா்பு கொண்டு உதவுமாறும் நண்பா்கள் வட்டத்தின் நிா்வாகத்தினா் கேட்டு நிற்கின்றனா்
தொடா்புக்கு 94771816052