ஊா்காவற்துறையில் 06 பேருக்கு கொரோனா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்றைய தினம் (மாா்ச் 05) வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 08 பேருக்கும் மன்னாா் மாவட்டத்தில் 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஊா்காவற்துறை சுகாதார பிாிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை பிரதேசத்தில் 06 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னா் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவா்கள்.

போதனா வைத்தியசாலையில் சோ்க்கப்பட்ட நவாலிப் பிரதேசத்தினை சோ்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

கோப்பாய் பிரதேசத்தில் ஆசிாியா் ஒருவா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்ட ஆசிாியையுடன் பிரயாணம் செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TAGGED:
Share this Article