மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர்உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம்அடைந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்றுமுன்தினம் (ஜனவரி23) மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.

மன்னாரைச் சேர்ந்த  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்தநபர் குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article