மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும்தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்–தலைமன்னார்பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச்சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 32) மாலைஇடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மன்னார்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியநிலையில்,வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலைமன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில்பயணித்துள்ளார்.

இதன் போது மன்னார்–தலைமன்னார் பிரதான வீதி,காட்டாஸ்பத்திரி பகுதியில்குறித்த பேருந்தை வழிமறித்த ஒரு குழுவினர் குறித்த பேருந்தில் ஏறி கூரிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி,குறித்த நபரை தாக்கி பேருந்தில்இருந்து இறக்கி மோட்டார் சைக்கிலில்  கடத்தி சென்றுள்ளனர்.

குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில்கடுமையாக தாக்கிய நிலையில் பின்னர் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Share this Article