மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார், தலைமன்னாரில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article