மகாதேவா சிறுவர் இல்லத்தில் சதுரங்கத்தினை வலுவூட்டும் செயற்றிட்டம் அச்மையில் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில்சதுரங்கத்தினை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி மகாதேவாசிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.

மகாதேவா சிறுவர் இல்லத்தின் ஒழுங்குபடுத்தலில் இச் செயற்றிட்டம்ஆரம்பிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச்சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன்  கலந்து கொண்டு இத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இச் செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் இல்லங்களில் தொடர் சதுரங்கப் பயிற்சிகள்வழங்கப்பட்டு அங்கு சதுரங்கக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இல்ல மட்டத்தில்அணிகளாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன் , இச்செயற்பாடுகள் ஊடாக சதுரங்க விளையாட்டு மேம்படுத்தப்படுவதுடன் இல்லக்குழந்தைகளின் திறன்களும் வளர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article