மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மகளிருக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் நேற்று (மார்ச் 21) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றன.

விளையாட்டு நிகழ்வுகளை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

பொட்டு வைத்தல், தண்ணீர் நிரப்புதல், காப்பு சேர்த்தல், கோன் சுற்றுதல், பலூன் பாதுகாத்தல், சங்கீதக்கதிரை,மற்றும் கிராம மகளிர் அமைப்புகளுக்கிடையிலான கிளிதட்டு போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இந்தப் போட்டிகளில் நெடுந்தீவு பிரதேச மகளிர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

Share this Article