புதுக்குடியிருப்பு வியாபாரியின் மனைவிக்கும் கொரோனா தொற்று!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட வியாபாரியின் மனைவிக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்புச் சந்தையில் எழுமாற்றாக 12 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டார்.

அதையடுத்து புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டதுடன், வியாபாரியுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த வியாபாரி தம்புள்ள பொருளாதார மையத்தில் இருந்து மரக்கறிகள் கொள்வனவு செய்துவந்து, புதுக்குடியிருப்புச் சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை செய்பவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரிடம் காணப்பட்ட கொரொனா வைரஸ் வீரியம் மிக்கது என்றும், அதனால் அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரியிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகின.

தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

TAGGED:
Share this Article