புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட கொரோனா வீாியம் கூடியது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்றும் அதனால் அது நிறையப்பேருக்கு பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தொற்றாளருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோன ஏனைய வகை கொரோனாக்களை விடவும் அதி வீரியம்கூடியது.

இதனால் அங்கு பலருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான ஏது நிலை காணப்படுகின்றது.

அதேவேளை, இந்த வகை கொரோனாத் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்

TAGGED:
Share this Article