10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களின் பதிவுசெய்யும் செயல்முறை நாளை (நவம்பர் 17) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் இணையவழி முறைமையின் ஊடாக தங்களை பதிவு செய்யலாம் என்று பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், உறுப்பினர்கள் தேவையான தகவல்களை பெறுவதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பாராளுமன்றத்தில் இரண்டு தகவல் மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபுகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வு 25, 26, 27 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (நவம்பர் 16) வெளியிடப்படும்.
புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.