புங்குடுதீவு வைத்தியசாலைக்கான புதிய போக்குவரத்து சேவை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவை இன்று (01 மே) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு முன்னர், வைத்தியசாலைக்கு நேரடியாக செல்லும் பேருந்து சேவை இல்லாததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையை மாற்றும் நோக்கில், புங்குடுதீவு தனியார் பேருந்து இலக்கம் 776 உடன் தொடர்புடைய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் திரு திலீப் அவர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளை ஏற்று, இன்று காலை 7.40 மணிக்கு இறுப்பிட்டி பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த புதிய பேருந்து சேவை, புங்குடுதீவு வைத்தியசாலையை அடைந்து பின்னர் யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கி செல்லும்.

அதேபோல், நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் பேருந்து, புங்குடுதீவு வைத்தியசாலையை வழியாக சென்று இறுப்பிட்டி பகுதிக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயண சேவையை முறையாக பயன்படுத்துமாறு புங்குடுதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்காப்புப் பேரவையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வைத்தியசாலையின் சேவையைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் பல தடைகளை மீறி இந்தப் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ள புங்குடுதீவு தனியார் பேருந்து போக்குவரத்து சங்க நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம்.

மேலும், இந்த சேவையின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்ய நோயாளர் நலன்காப்புப் பேரவையின் உப தலைவர் திரு கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததையும் இங்கு குறிப்பதற்குரியது.

Share this Article