புங்குடுதீவு மடத்துவெளியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மடத்துவெளி 08ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுகானந்தன்  சிந்துஜா (வயது27) என்பவரே இவ்வாறு சடலமாக ஆலய கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் நேற்றையதினம் (ஜூன் 04) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article