புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருப்பலியின் இறுதிநாள் நிகழ்வாக கடந்த மே 20 ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத் தேரிலே புனித சவேரியார் திருவுருவம் தாங்கி வீதிவலம் வந்தமையும் , திருச்சொரூப ஆசீர்வாதம் இடம்பெற்றதையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் திருவிழா மே 19 மாலை நற்கருணை எழுந்தேற்றம் நடைபெற்று இறுதி நாள் திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது.