புங்குடுதீவு, அல்லைப்பிட்டியில் 100 குடும்பங்களுக்கு நிவராண உதவி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சென்.லூசியா (Saint Lucia) நாட்டில் வசிக்கும் ராஜ் அவர்கள்களின் நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் கொரோனா காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்த 100 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அசோக்குமார் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் நீடிக்கப்பட்டிருந்த பயணத் தடை மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த ஏராளமான குடும்பங்கள் அன்றாட உணவுக்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தாயக தேசத்தில் மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர். அனைத்து கொடையாளர்களுக்கும் எமது சிரம்தாழ்த்திய நன்றிகள்.

Share this Article