“ஊரும் உறவும் நெடுந்தீவு” என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வேறுபட்ட நாடுகளிலே வாழந்தாலும் நெடுந்தீவின் உறவுகளாக ஒருங்கிணைந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள். தொடரந்துவரும் எதிர்கால செயற்பாடுகளில் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று தாங்கள் அனைவரும் எடுத்துக் கூறியிருந்தமை எமக்கு மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அதற்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம் நன்றி கூறுகின்றோம். அந்த வகையில் அவுஸ்ரேலியா, இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வாழும் எமது ஊரின் உறவுகளுக்கிடையில் அடுத்தடுத்து கலந்துரையாடல்கள் மிகச்சிறப்பானதாக வெற்றிகரமான முறையில் நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதன் தொடர்ச்சியாக July 26.2020 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 3.00 மணிக்கு பிரான்ஸ் மண்ணில் நடைபெறவிருக்கும் எமது உறவுகளை ஒன்றிணைக்கும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு நட்புடன் அழைப்பினை விடுக்கின்றார்.
நன்றி?
????????
ஊரும் உறவும் நெடுந்தீவு.