பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் நேற்றையதினம்(மார்ச் 31) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், சிரேஷ்ட மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் பாடசாலை இடைவிலகல், வரவு ஒழுங்கீனம், சிறுவர் கழக செயற்பாடுகள், தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விடயங்கள், மாணவர்களின் போக்குவரத்து தொடர்பான விடயங்கள், சுகாதாரம், கல்வி, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி, மற்றும் உளவளத்துணை தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டன.

Share this Article