பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழாதிருத்தல பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்  இன்று (மார்ச்22) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்ஆரம்பமாகி நேற்றையதினம் (மார்ச்21) மாலை நற்கருணை திருப்பலியைகிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அடிகளார் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இன்றையதினம் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

ஆலய வழிபாடுகளில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 8000 இற்கும் அதிகமான பக்தர்கள் பக்தியுடன்பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article