பாராளுமன்றத் தேர்தல் – 2024 தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்துஏற்பாடுகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாராளுமன்றத் தேர்தல் – 2024 இல் வாக்களிப்பதற்காக யாழ்ப்பாணமாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கான படகுச் சேவைகளின்அடிப்படையில், குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து காலை 08.00 மணிக்குவடதாரகைப் படகும்,  08.15 மணிக்கு சமுத்திரதேவா படகும், 11.30 மணிக்குகுமுதினிப் படகும், நண்பகல் 01.00 மணிக்கு கரிகணன் படகும், பிற்பகல் 02.30 மணிக்கு குமுதினிப் படகும், மாலை 04.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 05.30 மணிக்கு வடதாரகை படகும் நெடுந்தீவு துறைமுகத்திற்குசெல்லவுள்ளன.

அதேபோன்று நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 06.45 மணிக்குவடதாரகைப் படகும், 07.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், 10.30  மணிக்குகுமுதினிப் படகும், 11.30 மணிக்கு கரிகணன் படகும், நண்பகல் 01.00 மணிக்குகுமுதினிப் படகும், மாலை 03.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 04.30 மணிக்கு வடதாரகைப் படகும் குறிகட்டுவான் துறைமுகத்திற்குபயணிக்கவுள்ளன.

அத்துடன், நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுப் பகுதிகளுக்கான விசேடகடற்போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேசசெயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து இலங்கைபோக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஆகியவற்றின்போக்குவரத்து ஒழுங்குகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article