பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பலாலி விஜயம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நேற்று (17/11) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு பிராந்தியத்தில் பணியாற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

* இராணுவத்தின் மூலோபாயத் தேவைகள்.

* தளபாட மற்றும் விநியோக ஏற்பாடுகள்.

* படையினரின் நலன்புரி விடயங்கள்.

* இராணுவத்தின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல்.

* காணி தொடர்பான பிரச்சினைகள்.

* பாதுகாப்புப் படைகளின் தற்போதைய தேவைகள். போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

குடாநாட்டில் பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக நிலைமைகளை நேரில் அறிந்துகொள்ளும் கள விஜயத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதியுடன் இணைந்து பலாலி இராணுவ வைத்தியசாலைக்கும் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது வைத்தியசாலையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன், அதன் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

Share this Article
Leave a comment