பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, நாளை புதன்கிழமை (28 பெப்ரவரி) மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (29) பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்குள் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

Share this Article