வடக்கில் நேற்று இருவருக்கு நேற்று (January 03) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தைக் கொரோனாக் கொத்தணியைச் சேர்ந்தவராவார்.
மருதனார்தடம் கொரோனாக் கொத்தணியை அடுத்து இவர் தெல்லிப்பழையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதை மீறி அவர் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அதையறிந்த சுகாதாரப் பிரிவினர், அவரை அங்கு தனிமைப்படுத்தியிருந்தனர்.
அவரது மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்காக அநுராதபுரம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.