நெடுவூர் கலாசார மையம் அமைக்க ஒத்துழைப்பு கோரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து நெடுந்தீவு மண்ணில் “நெடுவூர் கலாசார மையம்” ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நடவடிக்கையாக உள்ளூரிலும் ஏனைய மாவட்டங்களிலும் மற்றும் உலக நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் நெடுந்தீவு உறவுகள் தங்கள் வசமுள்ள நெடுந்தீவின் கலாசாரப் பொருட்கள் மற்றும் படங்களை நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மண்ணின் பாரம்பரியத்தைதயும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதற்கும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லவும் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் புகைப்படங்கள் யாவும் பிரதி செய்யப்பட்டு மூலப்பிரதி மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:- +94 (77) 840 0534

Share this Article