நெடுந்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு தொலைக்காட்சி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கென தொலைக்காட்சி ஒன்று நேற்று (ஜூன் 2) அன்பளிப்பு செய்யப்பட்டது.

அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த தொலைக்காட்சியை நெடுந்தீவுப் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்கள் நெடுந்தீவு வைத்திய அதிகாரி தஷுசயன் அவர்களிடம் கையளித்தார்.

அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்தினூடாக நெடுந்தீவிற்கு கிடைக்கப்பெறுகின்ற உதவித்திட்டங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருப்பதாகவும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த பிரதேசசெயலர் வைத்தியசாலையில் நிலவும் மேலதிக பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத்தியத்தின் இவ்வுதவியை நெடுந்தீவிற்கு கொண்டுவந்துசேர்பதில் முனைப்புடன் செயற்படுகின்ற இராமலிங்கம் மருதநாயகத்திற்கும் வைத்தியசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்து தேவைப்பாடுகள் குறித்தும் இதன்போது தெரிவித்தார்.

Share this Article