நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் புதிய முதல்வராக அருட்சகோதரி மரீனா சகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் புதிய முதல்வராக அருட்சகோதரி மரீனா சகாயம் தனது பணி பொறுப்புக்களை இன்று(நவம்பர் 1) ஏற்றுக்கொண்டார்.

யாழ் மாகாண திருக்குடும்ப கன்னியர்சபையின் தலைமைத்துவ குழுவின் ஆலோசகர் அருட்சகோதரி அன்ரனீற்ரா மார்க் அவர்களின் முன்னிலையில் மேற்படி பொறுப்பேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வராக கடந்த இரண்டரை வருடங்களாக பணியாற்றிய அருட்சகோதரி நிரஞ்சினி அவர்கள் தனது பணி இடமாற்றம் காரணமாக ஊர்காவற்துறை புனித மரியாள் பாடசாலைக்கு செல்வதனால் ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்திற்காக அருட்சகோதரி மரீனா சகாயம் நியமிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article