நெடுந்தீவு மேற்குப் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்கு பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது 25 ) என இனங்காணப்பட்டுள்ளார்.

அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஆட்களற்ற வீட்டினை குறித்த இளைஞரே பராமரித்து வருவதாகவும் , பகல்வேளைகளில் அவ்வீட்டில் படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இன்று (ஒக்ரோபர் 30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது விடயம் நெடுந்தீவு பிரதேச பொலிசாருக்கு வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் , திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகள் முடித்த பின்னரே சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article