நெடுந்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் கருத்திட்டத்தின் கீழ் நேற்றையதினம் ( மார்ச் 31)
நெடுந்தீவு சமுர்த்தி பிரிவினரால் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதியின் தலைமையில் இந்தக் கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இத் திட்டத்திற்கான நிதிபங்களிப்பை புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட மியாம்பிள்ளை – மரியராஜ் என்பவர் வழங்கியதுடன் அவரே நேரடியாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

Share this Article