நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலய மண்டபம் மாபிள் பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளிற்கமைய நெடுந்தீவு கிழக்கு 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நா.வேலாயுதம் அவர்களால் வைத்தியசாலையில்அமைந்துள்ள ஞானவைரவர் ஆலய முன்பக்க மண்டபத்திற்கு 02 இலட்சம் பெறுமதியில் மாபிள் பதித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் இறைபணியினை மேற்கொண்டவர்களுக்கு நெடுந்தீவு வைத்தியசாலைநிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.