நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு தென்னம்பிள்ளைகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நேற்று (ஒக்ரோபர் 31) தென்னம்பிள்ளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இதில் பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி கலந்து கொண்டு தென்னம்பிள்ளைகளை மக்களுக்கு வழங்கி வைத்த்து சிறப்பித்தார.

இத் தென்னங்கன்றுகளை சபாபதிப்பிள்ளை கணேஸ்வரன் (கண்ணன் கனடா) தமது பேத்தியார் இராமலிங்கம் இராமாசிப்பிள்ளை அவர்களின் நினைவாக இலவசமாக பிரதேச செயலகத்துக்ககு வழங்கிவைத்து சிறப்பித்தார்.

இவர் மக்களின் நீடித்த நிலையான பொருளாதார முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் நெடுந்தீவிலேயே
நாற்று போடப்பட்ட வளர்க்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமையால் பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்றவகையில் வளரக்கூடியது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article