நெடுந்தீவு தூய மரியன்னை ஆலயத்தின் திருச்சுரூபம் தாங்கிய செபமாலை பவனி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய திருநாளின் இறுதி நிகழ்வான அன்னையின் திருச்சுரூபம் தாங்கிய செபமாலை பவனி நேற்று(செப்ரெம்பர் 8) மாலை ஆரம்பமாகி ஆலய அருகாமை வீதியூடாக சென்று றோ.க.மகளீர் கல்லூரி முன்வீதி வழியாக பயணித்து புனித தோமையார் ஆலய முன் வீதியூடாக பிரதான வீதியை சென்றடைந்து பின்னர் அவ் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

இதேவேளை தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழாவின் நற்கருணை விழா நேற்றுமுன்தினம் மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.

திருவிழா திருப்பலி நேற்றுக் காலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article