நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இவ் ஆண்டில் (2023 ) தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்பட்ட 44 மணவர்களுக்கு இன்று(ஓகஸ்ட் 23) சமுர்த்தி வங்கி சேமிப்பு புத்தகங்கள் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.
[videopress nI417Oht]
எமது கோரிக்கைக்கு அமைவாக நெடுந்தீவு பிரதேச செயலர் இன்று மாணவர்களுக்கான சேமிப்பு புத்தகங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தமைக்கு எமது குழுமம் சார்பில் நன்றி பகிர்வதுடன், பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று தரம் 01 மாணவர்களது விபரங்கள் பெற்று அதனடிப்படையில் கணக்குகளை ஆரம்பித்து வழங்க முழுமனதுடன் செயற்பட்ட நெடுந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர், வங்கி அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலரகளுக்கும் எமது குழுமம் சார்பில் நன்றியை தெரிவித்து நிற்கின்றோம்.