நெடுந்தீவில் கடும் வரட்சி நிலவுவதால் கால்நடைகளுக்காக பயன்படும் நீர்நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதனால் குதிரைகளுக்கு நீர் வழங்கும் சேவை சமூக ஆர்வலர்களால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப். 20 அன்று குதிரைகளுக்கான முதலாவது வறட்சிகால தண்ணீர்விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதற்கான நிதி அனுசரணையினை நெடுந்தீவில் உள்ள நலன்விரும்பிகள் மற்றும் புலம் பெயர் உறவுகள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இடருற்றஉயிரினங்களின் நீர்த் தேவையை நிவர்த்தி செயவதற்கான நீர்விநியோகத்தினை மேற்கொள்ள உறவுகள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியினை வேண்டிநிற்கின்றனர் நீர்வழங்கல் குழுவினர்.
கடந்த வருடமும் நெடுந்தீவில் ஏற்பட்ட வரட்சி நிலையை காரணமாக குதிரைகளுக்கு நீர் வழங்கும் செயற்பாட்டை 360000.00 ரூபா சேகரித்த நிதியில் செலவிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.